states

img

உத்தரகண்டில் பள்ளிக்கல்வி இயக்குனர் மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

உத்தரகண்டில் பள்ளிக்கல்வி இயக்குனர் மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

டேராடூன் பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலம் ராய்ப்  பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ உமேஷ் சர்மா, டேராடூ னில் உள்ள தொடக்க கல்வி இயக்  ககத்திற்கு சென்று, அங்குள்ள அரசு பள்ளிக்கு நிலம் வழங்கிய வரின் பெயரை உடனடியாக சூட்ட  வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு முறைப்படி மாநில அரசின் அனுமதி தேவை என்று தொடக்க கல்வித்துறை இயக்குனர் அஜய்குமார் நவுடி யால் தெரிவித்தார். உடனே சுமார் 25 ஆதரவாளர் களுடன் இயக்குனரின் அலுவல கத்திற்குள் நுழைந்த எம்எல்ஏ, அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன்  அலுவலக பொருட்களை அடித்து  உடைத்துள்ளனர். இந்த தாக்குத லில் தலையில் காயமடைந்த இயக்குநர் நவுடியால் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.  பாஜக எம்எல்ஏ மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் மீது அரசு  ஊழியரை பணி செய்ய விடாமல்  தடுத்தது உட்பட பல்வேறு பிரிவு களில் ராய்ப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதே சமயம் எம்எல்ஏ தரப்பு அளித்த புகாரின் பேரில் இயக்கு நர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்  பட்டுள்ளது.  பள்ளிக்கல்வி இயக்குனர் மீது என்ன தவறு? அவர் மீது  வழக்குப் பதிவு ஏன்? என கேள்வி  எழுப்பி, தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவ தாக ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.