சியோல் தென் கொரியாவில் பயணி கள் விமானம் விபத்துக் குள்ளானதில் 179 பயணி கள் பலியாகினர். தென் கொரிய தலைநகர் சீயோ லுக்கு தெற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் முவான் நகரில் விமான நிலையம் உள்ளது. இங்கு ஜேஜு ஏர் பேசஞ்சர் நிறுவ னத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி டிசம்பர் 29 அன்று காலையில் , 181 பேரு டன் தரையிறங்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓடுபாதை யில் இருந்து விலகி சுற்றுச்சுவரில் விமானம் மோதி வெடித்தது. இந்த கோர விபத்தில் 179 பயணி கள் உயிரிழந்தனர். ஒரு பயணி, ஒரு விமான சிப்பந்தி என இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானம் பாங்காக்கில் இருந்து தென் கொரி யாவுக்கு வந்தது. அந்த விமா னத்தில் தாய்லாந்து நாட்டுப் பய ணிகள் இருவர் இருந்தனர் என்று தென் கொரிய விமான போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது. லேண்டிங் கியர் சரியாக பணி செய்யாததால் விபத்து நடந்தி ருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட் டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமான காக்பிட் ரெக்கார்டரும் கண்டெ டுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும். தென் கொரிய அரசானது 7 நாட்கள் தேசிய துக்கம் அனு சரிக்கப்படும் என்று அறிவித்துள் ளது. விமான நிறுவனம் பொறுப்பேற்பு ஜேஜு ஏர் சிஇஓ கிம் இ வெளி யிட்ட அறிக்கையில், நடந்த சம்ப வத்துக்கு நான் முழு பொறுப்பேற் கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் கிம் இ உள்பட விமான நிறுவனத் தின் உயர் அதிகாரிகள் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோரினர்.