ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 17 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி செலவிடப்பட்டது என்பது குறித்து ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட தில்லி - சென்னை ஜி.டி. விரைவு ரயில், சிந்தி ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.