ஜம்மு-காஷ்மீரில் 10 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரின் தோடா அருகே வியாழனன்று காலை, 17 வீரர்க ளுடன் உயரமான மலைப்பகுதி யில் உள்ள முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றது. பதேர்வா சம்பா சாலையில் உள்ள கன்னிடாப் என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்தி லேயே 4 பேர் உயிரிழந்தனர். காயம டைந்த 11 ராணுவ வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். வியாழனன்று மாலை நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த னர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 7 வீரர்கள் தொடர் சிகிச்சை யில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
