states

img

பீகார் தேர்தல்: பிபூதிபூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் வெற்றி!

பீகார் மாநிலத்தின் பிபூதிபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார், 10,281 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து இரண்டாம் கட்ட மாக 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 67.14% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி/முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் பிபூதிபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார், 10,281 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்அஜய் குமார் மொத்தம் 79,246 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜக்கிய ஜனதா தள வேட்பாளர் ரவீனா குஷ்வாஹா 68,965 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.