தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர அரசு பொதுத்துறையின் மலிவான மின்சாரத்தை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை திறந்த வெளியில் வாங்கி வருகிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்துகிறது. இந்த மின்சார கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விஜயவாடாவில் போராட்டம் நடத்தியது. இதே போன்று நவம்பர் 8 முதல் 14 வரை மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என சிபிஎம் ஆந்திர மாநிலக்குழு அறிவித்துள்ளது.