ஆந்திர மாநிலம் அனகப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால், அவ்விடத்தை சுற்றி இருந்த 53 பேருக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அச்சுதபுரம் மாவட்டத்தின் அனகப்பள்ளியில் பிராண்டிக்ஸ் என்ற தொழிற்ச்சாலை உள்ளது. அந்த தொழிற்சலையில் உள்ள ஆடை தயாரிக்கும் பிரிவு ஒன்றில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவ்விடத்தில் பணியில் இருந்த 95 பேருக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆந்திர அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளது.