உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி சமமான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்; உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.