tamilnadu

img

சென்னை: விரைவில் குடிநீர் ஏடிஎம்!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளன.
கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.