கோழிக்கோட்டில் நிலத்துக்கு அடியில் மர்ம சத்தம்
கேரளா மாநிலம் கோழிக் கோட்டில் சனியன்று நள்ளி ரவு நேரத்தில் நில அதிர்வு போன்றும், நிலத்துக்கு அடியில் இடி யுடன் கூடிய முழக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் காயக்கொடி பஞ்சா யத்தில் உள்ள எலிக்கம்பாறை கிரா மத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள் ளது. புவியியல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற் றுக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஆய்வுக்கு பின் அவர்கள் கூறினர். எனினும் நிலத்தடி யில் இருந்து இடி போன்ற சத்தம் எத னால் வந்தது என்ற சந்தேகத்துடன் கோழிக்கோட்டில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக என செய்திகள் வெளி யாகியுள்ளன.
பயங்கரவாதத்தில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே தட்டில் வைத்த உலகநாடுகள் சுஹாசினி ஹைதர் பரபரப்பு பேச்சு
பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் தொடர்பாக இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான “தி இந்து”வின் தூதரக விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் நேர் காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதத்தில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே தட்டில் உலகநாடுகள் வைத்துள்ளன என சுஹா சினி ஹைதர் பேசியது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”இந்தியா மற்றும் பாகிஸ்தா னுடன் பேசிய அனைத்து உலகத் தலை வர்களின் முழு கவனமும் பதற்றங்களைக் குறைப்பதில் மட்டுமே இருந்தது. பயங் கரவாதத்தித்தின் மீது அல்ல. பயங்கர வாதம் தொடர்பாக தன்னை பாகிஸ்தானு டன் ஒப்பிடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது. ஆனால் அது நடக்க வில்லை. இந்தியாவுடனான அமெரிக்கா வின் வர்த்தகம் 140 பில்லியன் டாலர், பாகிஸ்தானுடனான வர்த்தகம் சுமார் 10 பில்லியன் டாலர். இருப்பினும் டிரம்ப் இரு நாடுகளையும் ஒரே அளவில் வைத்தி ருக்கிறார். பயங்கரவாதத்தித்திலும் உலகநாடுகள் ஒரே தட்டில் வைத்தன” இவ்வாறு அவர் பேசினார்.