states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்த தவறுகள் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். தாக்குதலுக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் என்ன? மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்றுக்கொண்டால், 1972 சிம்லா ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு பின்பற்றவில்லையா? இவை அனைத்தையும் விளக்க நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை விடுக்கிறோம். ஆனால் எந்த பதிலும் இல்லை.

ஆசாத் ஆமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர ஆசாத்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள், கொலை போன்ற செய்திகளே அதிகம் கேட்கப்படுகின்றன. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. குறிப்பாக ஆட்சி நிர்வாகம் அவசரநிலையை விட மோசமாக உள்ளது.

ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்

ஆப் சப்கி அவாஸ் கட்சித் தலைவர் ராமச்சந்திர பிரசாத் சிங் எங்களுடன் பணியாற்ற உள்ளார். இதே போன்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரின் மோசமான அணுகுமுறையால் மேலும் பலர் எங்களுடன் இணைவார்கள்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போட்டியிடப் போகிறாரா? அல்லது ஆர்ஜேடி கூட்டணிக்கு எதிராக போட்டியிடப் போகிறாரா? என்று தெரியவில்லை. அதனால் ஓவைசியை விமர்சிக்க “ஏ டீம்”, “பி டீம்” போன்ற வார்த்தைகளை தகுதியில்லாதவை.