கலப்பட பால் விநியோகம் ஆந்திராவில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
பாஜக கூட்டணி ஆளும் ஆந்தி ரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராஜமகேந்திரவரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஒரு வியாபாரி யிடம் பால் வாங்கி அருந்திய பல குடும் பத்தினருக்கு உடல்நிலை மோசமடைந் தது. பாலைக் குடித்தவர்கள் சிறுநீரகம் செயலிழந்ததும், அதனைத் தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட் டும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கிட்டத் தட்ட ஒரே வாரத்தில் 14 பேர் உயிரிழந்த னர். 5 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்நிலையில், ராஜமகேந்திரவரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் ஞாயிறன்று உயிரி ழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மேலும் 3 பேர் ராஜமகேந்திரவரம் மருத்துவமனை களில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களின் நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை உ யரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை கிழக்கு கோதாவரி மாவட்ட சுகாதார அதிகாரி கே.வெங்கடேஷ்வர ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
