லக்னோ, டிச.14- லக்கிம்பூரில் கார் நுழைந் தது மற்றும் வன்முறை சம் பவம் முன்கூட்டியே திட்டமி டப்பட்ட சதி என சிறப்பு விசா ரணைக் குழு செவ்வாய்க் கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்திலும் அதை தொட ர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகா ரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமை யில் விசாரணைக் குழுவை கடந்த மாதம் உச்சநீதிமன் றம் நியமனம் செய்தது. இந்த நிலையில், லக்கிம் பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது மற்றும் வன்முறை சம்பவத்தை ஏற்படுத்தியது தற்செயலாக நடந்தது இல்லை; முன்கூட்டியே திட்ட மிடப்பட்ட சதி என விசார ணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அமைச் சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் உள்ளிட்ட 13 குற்ற வாளிகள் மீது பதிவு செய்யப் பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத் திற்கு இக்குழு பரிந்துரைத் துள்ளது இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஜஸ்மிஸ்ரா தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா வை செவ்வாயன்று சிறை யில் சந்தித்துப் பேசினார்.