states

img

ஹாத்ரஸ் சம்பவத்தில் அப்பாவிகள் கைது

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் கடந்த ஜூலை 2 அன்று போலிச் சாமியார் போலே பாபாவின் மதச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த  2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு வும் அமைக்கப்பட்டுள்ளது.  ஹாத்ரஸ் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக உத்தரப்பிரதேச காவல்துறையால் அறிவிக்கப்பட்டவரும்,  மதச் சொற் பொழிவு நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தேவபிர காஷ் மதுகர் சனியன்று கைது செய்யப்பட்டார்.

துப்புரவுப் பணியாளரை கைதுசெய்த பாஜக அரசு

ஹாத்ரஸ் விபத்தில் உண்மை குற்றவாளியாக கருதப்படும் போலிச் சாமியார் போலே பாபாவை கைது செய்யாமல், அவரை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே உத்தரப்பிரதேச பாஜக  அரசு இறங்கியுள்ளது. இது வரை போலே பாபா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்ற நிலை யில், சனியன்று போலே பாபா, “ஹாத்ரஸ் விபத்து சமூக விரோதிகளின் செயல்” என வீடியோ வெளியிட்டார். 

இந்நிலையில், ஹாத்ரஸ் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்களில் தேவபிரகாஷ் மதுகர், ராம் பிரசாத் ஷக்யா மற்றும் சஞ்சு யாதவ் ஆகிய 3 பேரை தவிர்த்து, மற்ற 4 பேர் அப்பாவிகள் என தகவல் வெளி யாகியுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரம்லதைதே யாதவுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கும் எந்த சம்மந்த மும் இல்லை. சம்பவம் நடந்த நாளன்று ரம்லதைதே, கூட்ட நெரிசல் ஏற்பட்ட  புல்ராய் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் அமைக்கப் பட்ட வாகன நிறுத்துமிடத்தில் துப்புரவு மற்றும் இதர வேலைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் ஹாத்ரஸ் விபத்தில் தொடர்பு இருப்பதாக ரம்லதைதே யாதவையும் கைது சிறை யில் அடைந்துள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு. இதுகுறித்து ரம்லதைதே யாதவின் மகன் அங்கித் யாதவ் சமாஜ்வாதி தலைவர் அகி லேஷுக்கு எழுதிய கடிதத்தில், “எனது தந்தைக்கும் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பு இல்லை. அவர் கூலி வேலை களை பார்க்கவே அங்கு சென்றவர்.  ஆனால் அவரும் கைது செய்யப்பட்டுள் ளார். எனது தந்தையை விடுவிக்க உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதே போல தொடர்பு இல்லாத வர்கள் மேலும் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகி யுள்ளது. ஹாத்ரஸ் விபத்தில் போலிச் சாமியாரை காப்பாற்ற, அப்பாவி களை கைது செய்துவரும் உத்தரப்பிர தேச பாஜக அரசின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.