states

img

ஆதித்யநாத்தே தினமும் தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறார் உ.பி.யில் தோற்று விடுவோம் என்ற அச்சம் பாஜகவுக்கு வந்து விட்டது!

அகிலேஷ் பேச்சு

லக்னோ, டிச.20- உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்ய நாத்தே, நேரடியாக தனது தொலைபேசியை தினமும் ஒட்டுக் கேட்கிறார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டி யுள்ளார். இதன்மூலம் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அகிலேஷ் மேலும் கூறி யிருப்பதாவது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்களை துன்புறுத்துகிறது. எங்களது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. ‘பயனற்ற’ உ.பி. முதல்வரும், தொலைபேசி உரையாடல் பதிவுகளை தினமும் மாலை வேளையில் ஒட்டுக் கேட்டுள்ளார். ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் ‘வாட்ஸ் ஆப்’ பல்கலைக்கழகம் நடத்துகிறார்.

எந்தவொரு மாநிலத்திலும் பாஜக தோற்கப் போவதாக இருந்தால் விசாரணை அமைப்பு களை அக்கட்சி அதிகம் பயன்படுத்தும் என் பதை ஒட்டுமொத்த தேசமும் அறியும். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது, யோகி அரசு நீடிக்காது என்பது தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி பயத்தால்தான் உத்தரப் பிரதேசத்துக்கு வரும் பாஜக தலைவர்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. வருமான வரித் துறை, அம லாக்கத் துறை, சிபிஐ போன்ற துறையினர் மூலம் தாக்கும் திட்டமும் உள்ளது. மாநி லத்தில் சமாஜ்வாதி அரசு அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, முதன்முறையாக இது போன்ற அமைப்புகள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.

;