states

img

ராஜஸ்தான் பாஜக அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் வலுக்கும் போராட்டம்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஹிண்டன் நகரில் கடந்த மாதம் மாற்றுத்திறனாளி பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் பாஜக தலைமையிலான பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இந்நிலையில், பழங்குடியின சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஜெய்ப்பூரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சிறுமியின் குடும்பத்தினர் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதிவாசி அதிகார் மஞ்ச், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.