மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். ஆனால் தற்போது, மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். கோரோனா நோய் தொற்றால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப இந்த முடிவில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்