மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவராக இருக்கும் ஷாஜகான் ஷேக் தனது கூட்டாளிகளுடன் சந்தேஷ்காளி கிராம பெண்களை மிரட்டி நிலத்தை பறித்தும், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட போராட்டங்களால் 55 நாட்களுக்கு பின் ஷாஜகான் ஷேக் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜகான் ஷேக் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நீதி கேட்டும், நிலத்தை விரைவில் மீட்க கோரி பாசிர்ஹாட்டில் ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி தலைமையில் மாணவர், மாதர் சங்கத்தினர் கூட்டாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வலுக்கட்டாயமாக கைது செய்தது.