states

img

மணிப்பூரில் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி திங்க ளன்று, கனமழையால் பாதிக் கப்பட்ட அசாம் மாநிலம் மற்றும் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூர் மாநி லத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அசாம்...

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் கனமழையால் உருக்குலைந்துள்ளது. மொத்த முள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.  கனமழைக்கு இதுவரை 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 24 லட்சம் பேர் இயல்புநிலையை இழந்துள்ளனர். இந்நிலையில், திங்களன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் இருந்து அசாமின் புலேர்டலில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந் தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பதிவில்,“வெள்ளம் இல்லாத அசாம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே இந்த நிலைமை பிரதிபலிக்கின்றது. அசாம் மக்களு டன் நான் நிற்கிறேன். நாடாளுமன்றத் தில் நான் அசாம் மக்களின் சிப்பா யாக இருப்பேன். மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் ஆதர வையும் விரைவாக வழங்குமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள் ளார்.

மணிப்பூர்...

தொடர்ந்து திங்களன்று மதியம் வன்முறையால் ஒன்றரை வருடமாக இயல்புநிலையை இழந்துள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி மீண்டும் பயணம் மேற்கொண் டார். ஜிரிபம் மாவட்ட முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கி யிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களின் குறைக ளையும் கேட்டறிந்தார். 

வன்முறை பாதிக்கப்பட்ட பின்பு  மணிப்பூர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி செல்வது இது மூன்றாவது முறையாகும். வன்முறை தீவிரமாக நிகழ்ந்த காலகட்டத்தில் ஒரு முறை யும், காங்கிரஸ் கட்சியின் “ஒற்றுமை நீதி யாத்திரையின்” பொழுது ஒரு முறையும், தற்போது எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல் முறையா கவும் என 3 முறை வன்முறைக்குப் பின் மணிப்பூர் சென்றுள்ளார் ராகுல் காந்தி. 

ஆனால் பிரதமர் மோடி மணிப் பூர் குறித்து வாய் திறக்கவே மறுக்கி றார் என்பது குறிப்பிடத்தக்கது.