states

img

வெடிமருந்து தொழிற்சாலையில் 9 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே பசார்கான் கிராமத்தில் “சோலார் காஸ்ட் பூஸ்டர்” என்ற பெயரில் வெடி மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திலிருந்து ராணுவத்துக்கு வெடி பொருட்கள் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று காலை பேக்கிங் செய்யும் பிரி வில் திடீரென தீப்பற்றி வெடிவிபத்து ஏற்பட்டு  9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களில் 6 பேர் பெண்கள். பலர் படு காயமடைந்து ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், பாதுகாப்பு விதிமுறை களை முறையாகக் கடைப்பிடிக்காததால் வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசார ணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த  விபத்தில் பலியான மற்றும் படுகாயமடைந்த வர்களின் உறவினர்கள் சோலார் காஸ்ட் பூஸ்டர் நிர்வாகத்தை கண்டித்து திங்களன்று தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் குதித்த னர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. ஆலையை மூடும் வரை போராட்  டம் தொடரும் என உறவினர்கள் அறிவித்த னர்.

பெண்களை ஈடுபடுத்தியது ஏன்?

“சோலார் காஸ்ட் பூஸ்டர்” தொழிற்சாலை யில் தயாராகும் அனைத்து வெடிமருந்து களும் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஆபத்து நிறைந்த வெடிபொருட்களுக்கானது ஆகும். ஆபத்து நிறைந்த இந்த பணியில்  விதிகளை மீறி பெண்களை அதிகளவில் ஈடு படுத்தியுள்ளது சோலார் காஸ்ட் நிறுவனம்.  மேலும் பெண்கள் உட்பட அனைவரையும் சோலார் காஸ்ட் நிறுவனம் கூடுதல் நேரத் துக்கு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், பணியாளர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் வெடிவிபத்  துக்கு பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமாகி யுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர் பாக சோலார் காஸ்ட் நிறுவனம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.