states

img

மகாராஷ்டிரா: 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 2025-இல் ஜனவரி முதல் மார்ச் வரை  மொத்தம் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில பாஜக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக விதர்பா மாவட்டத்தில் 257 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட 767 பேரில், 376 விவசாயிகள் அரசு இழப்பீடு பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றும், அதே நேரத்தில் 200 விவசாயிகள் அரசு நிர்ணயித்திருந்த தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில அரசு, விவசாயிகளுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கத் தவறிய காரணத்தால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-கள் குற்றம் சாட்டியுள்ளனர்.