துலே, ஜூலை 4- மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 15 பேர் பலியாகி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள னர். மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள துலேயில் உள்ள மும்பை-ஆக்ரா நெடுஞ் சாலையில் பலஸ்னர் கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள் ளது. கண்டெய்னர் லாரியின் பிரேக் பழுதடைந் ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர், நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அருகே இருந்த உணவகம் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 15 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் களில் பலர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த வர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை ஷிர்பூர் மற்றும் துலே மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.