பெங்களூரு:
“நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது” என்றுகாங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பசுவதைத் தடுப்புச் சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், சித்தராமையா மேலும் பேசியிருப்பதாவது:எந்தவொரு பிரச்சனையிலும் கருத்து தெரிவிப்பதில் தயக்கம் காட்டுவதோ, வெறுமனே சங்கடப்படுவதோ யாருக்கும் நல்லதல்ல. அவ்வாறு இருப்பது, மற்றவர்கள் சொல்வது சரிதான் என்றதோற்றத்தை ஏற்படுத்தி விடும். மகாத்மா காந்தி, கோபால் கிருஷ்ணா கோகலே போன்ற அறிவொளி பெற்றவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இந்துத்துவத்தை’ காங்கிரஸ் நம்புகிறதே தவிர, பாஜக-வின்இந்துத்துவத்தை அல்ல என்றசெய்தியை காங்கிரஸ் கட்சியினர் பரப்ப வேண்டும்.
காந்தியும், கோகலேவும் அரசியல் நிகழ்ச்சி நிரலை அடையும்ஒரு கருவியாக மதத்தைப் பயன்படுத்தியது இல்லை. ஆனால் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அதன் அரசியல் நிரலை அடையஇதைச் செய்கின்றன. காங்கிரஸ்தொண்டர்கள் இதை அம்பலப் படுத்த வேண்டும்.நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. என்னைகேள்வி கேட்க பாஜகவினர் யார்? பாஜக-வினர் சாப்பிடாவிட்டால் இருந்து கொள்ளட்டும். அவர்கள் சாப்பிட வேண்டும் என்று நான் உட்பட யாரும் சொல்லப்போவதில்லை. உணவைத் தேர்ந்தெடுப்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை. அதற்குள் யாரும் தலையிட முடியாது. இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.