states

img

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் - விவசாயிகள் 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
மோடி அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில்  கொண்டுவந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் இன்று 23 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
பிரதமர் விவசாயிகளுடன் பேச வேண்டும்  மற்றும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை எங்களது போராட்டத்தை நாங்கள் கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.' மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்பதால் நாங்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இது குளிர்காலம் என்பதால்  நாங்கள் அதிக கூடாரங்களை தயார் செய்து வருகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். 

;