இனி குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1989 ஆம் ஆண்டின் ஒன்றிய மோட்டார் வாகன விதி 138 பிப்ரவரி 15, 2022 அன்று திருத்தப்பட்டதன் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது எனவும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.