states

img

ஜம்மு காஷ்மீரில்  லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை 8.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.  இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அல்ஜியிலிருந்து தென் மேற்கில் 79 கிலோமீட்டர் தொலைவிலும் 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

 இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள்குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

;