states

img

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை: 5000 செவிலியர்கள் வேலை நிறுத்தம்  

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 5000 செவிலியர்கள் திங்கள் நண்பகல் முதல்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆறாவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியர்கள் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.