states

பாட்னாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

பாட்னா, மார்ச் 3 - பீகார் மாநிலத்தின் முக் கிய கட்சியான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலை வர் தேஜஸ்வி “ஜன் விஸ் வாஸ் யாத்திரை (மக்கள் நம்பிக்கை யாத்திரை)”  ஞாயிறன்று பாட்னாவில் நடைபெற்ற மிகப்பிரம்மா ண்டமான மக்கள் கூட்டத்தில் சங்கமித்தது.

பிப்., 20 அன்று பீகார் மாநி லத்தின் முக்கிய நகரான முசாபர்நகரில் தொடங்கிய தேஜஸ்வியின் யாத்திரை 33  மாவட்டங்களுக்கும் சென்ற நிலையில், ஞாயிறன்று தலைநகர் பாட்னாவிற்கு வருகை தந்தது. யாத்திரை க்காக பாட்னாவின் காந்தி மைதானத்தில் பிரம்மாண்ட  பேரணியுடன் பொதுக்கூட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த பொதுக்கூட்டத் தில் பங்கேற்க ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு  பிரசாத் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சமா ஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் உள்ளிட்ட “இந்தியா”  கூட்டணி கட்சித் தலைவர் கள் பங்கேற்றனர். பொதுக் கூட்டத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் துணை முதல்வ ருமான தேஜஸ்வி தலைமை வகித்தார். அவரது தாயா ரும் முன்னாள் முதல்வரு மான ரப்ரி தேவி மற்றும் அவ ரது சகோதரிகளும் பங் கேற்றனர்.