states

img

அமிர்தசரஸ் பொற்கோவிலில் துப்பாக்கிச்சூடு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2007 முதல் 2012 வரை 5 ஆண்டுகள் வரை சிரோமணி அகாலி தளம் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது சிரோமணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர்.

இந்நிலையில், 2007இல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குற்றங்கள்,விரும்பத்தகாத செயல் கள் தொடர்பாக சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான “அகால் தக்த்” விசாரணை நடத்தி யது. விசாரணை முடிவில் பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், அமைச்சர்கள், சிரோமணி அகாலி தளம் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஆகியோர் குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் பொற்கோவில் சமையல றையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும், பக்தர்களின் காலணிகளை துடைக்க வேண்டும், கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தண்டனைக ளும், சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் பொ றுப்பில் இருந்து விலக வேண் டும் என  “அகால் தக்த்” அமைப் பின் தலைவர்கள் தண்டனை விதித்தனர்.

சுக்பீர் சிங் பாதலின் கால் துண்டிக்கப்பட்டதால் அவ ருக்கு விலக்கு அளித்து கோவில் வாயில் காப்பாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தண்டனையை நிறைவேற்ற பொற்கோவில் வாயி லில் புதன்கிழமை காலை சக்கர நாற்காலியில் ஈட்டியை பிடித்துக் கொண்டு காவல் காத்தார் சுக்பீர் சிங் பாதல். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் சுக்பிர் சிங் காயம் அடையவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.  

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து சுக்பீர் சிங் ஆதரவா ளர்கள் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்ட நபரை பஞ்சாப் காவல்துறை யால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் நாராயணன் சிங் என்பது  தெரியவந்தது. ஆனால் எதற்காக அவர் சுக்பீர் சிங்கை சுட்டுக்கொல்ல முயற்சி செய்தார் என்பது தொடர் பாக தெளிவான தகவல் வெளியாக வில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பஞ்சாப் மாநிலத் தில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது.