states

img

ஐதராபாத்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து  

ஐதராபாத் அருகே தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நிஜாம் பேட்டை என்ற இடத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

தீ விபத்தையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த 25 முதல் 30 நோயாளிகள் மூச்சுத்திணறல் காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் இருந்த பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தரைதளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.