states

11 லட்சம் இந்திய வீடியோக்களை அகற்றியது யூ டியூப்

புதுதில்லி, ஜூன் 2- இந்தியாவில் 2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று  மாதங்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை யூ டியூப் அகற்றியுள்ளது.  யூ டியூப்பில் நிறைந் துள்ள கோடிக்கணக்கான சேனல்களையும் அதில் பதி விடப்பட்டிருக்கும் வீடியோக் களையும் யூ டியூப் தணிக்கைக் குழு கவனித்து வருகிறது. இந்தியாவில் 2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று  மாதங்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை கூகுளின் நிறுவனமான யூ டியூப் அகற்றியுள்ளது. உலக ளவில் இந்த எண்ணிக்கை மிகப் பெரியது. இது தவிர, சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண் டில் 44 லட்சத்திற்கும் அதிக மான கணக்குகளை யூடியூப்  நீக்கியுள்ளது. இந்தச் சேனல் களில் பெரும்பாலானவை நிறுவனத்தின் ஸ்பேம் கொள் கைகளை மீறியதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. 90 சத வீதத்திற்கும்  அதிகமானவை போலியானவை என்பதால் நீக்கப்பட்டுள்ளது.  யூடியூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருவரைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்தை நீக்கி யுள்ளோம். சில சேனல்கள் அல்லது வீடியோக்கள் பயனர்களுக்கு வேறு ஏதா வது வாக்குறுதி அளிக்கின் றன, பின்னர் அவை வேறொரு தளத்திற்கு திரு ப்பி விடப்படுகிறது, இதனால் அவர்கள் கிளிக்குகளைப் பெறுவதோடு அவர்கள் அதி லிருந்து பணம் சம்பாதிக்கக் கூடும். இது தவிர, சில சேனல்கள் ஆபத்தான மென்பொரு ளைக் கொண்ட இணைய தளத்திற்கு பயனர்களை அனுப்புகின்றன, மேலும் அவை பயனர்களின் தனிப் பட்ட தகவல்களை சேக ரிக்கின்றன” என்று தெரிவித் துள்ளது.