அமீபா மூளைக் காய்ச்சல் தடுப்பு நீர்நிலைகளில் குளோரினேட் செய்ய களமிறங்குகிறது வாலிபர் சங்கம்
கேரளத்தின் பல்வேறு பகுதி களில் அமீபா மூளைக் காய்ச்சல் இருப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, அதைத் தடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் சங் கத்தின் இளைஞர் படைகள் குளோரி னேட் செய்யும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”அமீபா மூளைக்காய்ச்ச லைத் தடுக்க நீர்நிலைகளை சுத்தம் செய்து குளோரினேட் செய்யும் நடவ டிக்கைகளை கேரள மாநில சுகாதா ரத்துறை மேற்கொண்டு வருகிறது. மாநி லம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்து குளோரினேட் செய்ய வாலிபர் சங்கம் ஒத்துழைக்கும்” என அவர் கூறினார்.