states

விலைவாசியை குறைத்துவிட்டோம்; பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது நிர்மலா சீதாராமன் சொல்கிறார்

புதுதில்லி, செப்.8- இந்தியாவின் ஏற்றுமதியில் சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக உருவெடுத்துள்ள நிலையில்,  “நாட்டில் பணவீக்கம் சமாளிக்கும் அளவில்தான் உள்ளது” என ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா ஐடியாஸ்’ மாநாட்டில் பேசியிருக்கும் அவர், “இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், வருவாய் பகிர்வில் சமநிலை, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு என்பது இப்போது பெரிய பிரச்சனையாக இல்லை. கடந்த சில மாதங்களில் விலைவாசியை சமாளிக்கும் அளவுக்குள் கொண்டு வந்துவிட்டோம். ஜூலை மாதத்தில் சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதவிகிதமாக குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

;