states

img

மோடியின் நிகழ்ச்சியால் திரிபுராவில் வெடித்தது வன்முறை

மோடியின்  நிகழ்ச்சியால் திரிபுராவில் வெடித்தது வன்முறை

ஊடகங்களுக்கு பயந்து பிர தமர் மோடி ஒவ்வொரு மாதமும் வானொலி உரையாடல் என்ற பெயரில் “மான் கி பாத்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் கோவாய் மாவட்டம் ஆஷா ராம்பாரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வீட்டில் “மான் கி பாத்”  நிகழ்வை கேட்பதற்காக சுமார் 30 பாஜக வினர் கூடியிருந்தனர். அப்போது, திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்த தொண்டர்க ளும் அங்கு வந்தனர். “மான் கி பாத்” நிகழ்ச்சியை ஒளிபரப்ப திப்ரா மோதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 8 இருசக்கர வாக னங்கள், 2 கார்கள் அடித்து நொறுக் கப்பட்டன. காயமடைந்த இரு கட்சியின் தொண்டர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலால், இரு கூட்ட ணிக் கட்சிகளுக்கு இடையேயான உற வில் விரிசல் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கரு துகின்றனர்.