வெனிசுலா நாட்டவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஏமாற்றம்
ஓஸ்லோ உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கி யம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர் களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோ மில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியி யல், இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப் பட்டது. எனினும் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் அறிவிக்கப்படும் என்ற நிலை யில், அந்நாட்டின் முக்கிய நகரான ஓஸ்லோ வில் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப் பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு வெனி சுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோ டோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் புறக்கணிப்பு இந்தியா - பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில மாதங்களாக பொது நிகழ்வுகளில் கூட பேசி வந்தார். நோபல் பரிசு அறிவிக்கப்படும் முன்பு கூட இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அன்று காலை அமெரிக்க வெள்ளை மாளி கையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், “அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரி யாது. அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போர்களை நிறுத்தியுள்ளேன்” என்று கூறி யிருந்தார். அதாவது ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் கொடுங்கள் என்று கேட்காமல் மறைமுக மாக கோரிக்கை விடுத்தார். இத்தகைய சூழ லில் வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருப்பது டிரம்புக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. அவர் மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்பே தெரிவித்த நோபல் கமிட்டி நோபல் பரிசு பெறுபவர்களை 5 பேர் கொண்டு குழு தேர்ந்தெடுக்கும். ஜோர்கன் வாட்னே பிரைட்னஸ், அஸ்லே டோஜே, அன்னே எங்கர், கிறிஸ்டின் கிளெமெட், கிரை லார்சன் ஆகியோர் தான் 2025ஆம் ஆண்டின் 5 பேர் கொண்டு குழு ஆகும். டிரம்ப் நோபல் பரிசு கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே, நோபல் கமிட்டியின் தலைவரான பிரைட்னஸ், “எனது தலைமையிலான நோபல் குழு எந்த அழுத்தத்திற்கும் அடிப்பணியாது” என வெளிப்படையாகக் கூறினார். அவர் மறைமுக மாக சாடியது டிரம்ப்பை தான் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் டிரம்ப் தினமும் நோபல் பரிசு கொடுங்கள், எனக்கு தான் கண்டிப்பாக கிடைக்கும் என கூப்பாடு போட்டார். இத்தகைய சூழலில், எதிர்பார்த்தது போலவே இறுதியில் நோபல் கமிட்டி டிரம்ப்பை புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
