states

img

அமெரிக்க இறக்குமதி வரி உயர்வு கேரளாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

அமெரிக்க இறக்குமதி வரி உயர்வு கேரளாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

விளைவுகளை ஆய்வு செய்வதாக கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கண்ணூர் அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு கேரளாவை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு நடத்துவதாக தெரிவித்தார். கண்ணூரில் நிலையான வளர்ச்சிக்கு பொருத்தமான பயிர் நிர்ணய திட்டத்தை  தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசி னார். மேலும் அவர் பேசுகையில்,”இறக்குமதி வரி அதிகரிப்பு பொதுவாக இந்தியாவின் பொரு ளாதாரத் துறைக்கும், குறிப்பாக கேரளாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது கேரளாவின் ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்வதை கடுமையாகப் பாதிக்கும். உலகில் கேரளாவிலிருந்து விவசாயப் பொ ருட்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்கா ஆகும். முந்திரி, அரிசி, காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், உணவு தானியப் பொடிகளின் மொத்த ஏற்று மதியில் 20 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கடல் உணவு பதப்படுத்தும் அலகுகளைக் கொண்ட மாநிலமும் கேரளாதான். எனவே, கூடுதல் அமெரிக்க வரியின் தாக்கம் நமது கடல் உணவு ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற் படுத்தும். கேரளாவை கடுமையாகப் பாதிக்கும் இந்த நெருக்கடி குறித்து அரசாங்கம் ஆழமாக ஆய்வு செய்யும்” என அவர் கூறினார்.