புதுதில்லி,மார்ச் 24- தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கை உள்நாட்டு போரின்போது ஏராளமான தமிழர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். தமிழகம் முழு வதும் 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் களுக்காக நிதியுதவி, மானிய விலையில் அரிசி, இலவச உடைகள், பாத்திரங்கள், ஈமச்சடங்கு உதவி, அடிப்படை வசதிகளுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் ரூ.78 கோடி ஏற்கெனவே தமிழக அர சுக்கு வழங் கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.