states

img

பிஎஸ்என்எல்-க்கு 4 ஜி, 5 ஜி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுதில்லி, ஆக.3- 4 ஜி, 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டை பிஎஸ்என்எல் நிறு வனத்துக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மக்க ளவை உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நட ராஜன், ஒன்றிய அரசு, அரசின் ஆத்ம  நிர்பார் முன்னெடுப்புடன், பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசிங் சௌகான் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் 2009இல் இருந்து 3ஜி சேவை யை வழங்கி வருகிறது. சில  பகுதிகளில் வரையறுக்கப் பட்ட அடிப்படையில் 4ஜி சேவையை வழங்குகிறது. ஆத்ம நிர்பார் முன்னெடுப் பிற்கு ஏற்ப, 2018 இல் இருந்து 24 மாதங்களுக்குள் 4ஜி சேவையை வழங்கிட பிஎஸ்என்எஸ் நிறு வனம் ஒரு லட்சம் 4ஜி தளங்களுக்கான கொள்முதல் ஆணையை வழங்கி யுள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சரவை சம பங்கு உட்செலுத்துதல் மூலம், ரூ.89,047 கோடி அளவிலான மொத்த செலவுடன் கூடிய 4ஜி/5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிஎஸ்என்எல்க்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.        (ந.நி.)