states

img

பாஜகவை தகர்க்க முடியும்

நாகர்கோவில், மார்ச் 7- பாஜக, தேசிய அரசியலில் தகர்க்க  முடியாத சக்தி அல்ல என்று கேரள  முதல்வர் பினராயி விஜயன்கூறினார். திருவிதாங்கூர் மன்னன் சனாதன தர்ம ஆட்சி நடப்பதாக அறிவித்து நடத்திய ஒடுக்குமுறைக்கு  எதிரான தோள்சீலை போராட்டத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உள்ளது என   கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். நாகர்கோவிலில் திங்களன்று (மார்ச் 6) நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவதுஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்கள் உரையாற்றினர்.  பினராயி விஜயன் ஆற்றிய உரை யின் அம்சங்கள் வருமாறு: 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் ஸ்டா லினுடன் பங்கெடுக்க முடிந்த தற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள் கிறேன். மார்பு மறைக்கும் உரிமைக் காக நடத்தப்பட்ட போராட்டமே தோள்  சீலை போராட்டம். அதன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு  மார்பை  மறைக்கும் உரிமை  மறுக்கப்பட்டிருந் தது.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் மார்த்தாண்ட வர்மன் இனி திருவிதாங்கூர் சனாதன தர்ம ராஷ்ட்டிர மாக இருக்கும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்தே சனாதன தர்மத்தை ஒட்டிய ஏராளமான கொடுமைகள் சமூகத்தில் நிகழ்த்தப்பட்டன. மனிதாபிமானமற்ற அத்தகைய நடவடிக்கை கள் மிகப்பெரிய மக்கள் பகுதியினர் மீது  திணிக்கப்பட்டன. அதன்படி மிகவும் மோசமான வரிகள் விதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சட்டத்தின்படியே மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்டது. இத்தகைய மன்னராட்சியின் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன. அந்த முயற்சிகளின் பகுதியே தோள்சீலை போராட்டமாக வெடித்தது.  இந்த  போராட்டம் அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அதைத்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கு விவரித்தார். நான் இங்கு நிற்கும்போது திருவள்ளுவர், மகாகவி சுப்ரமணிய பாரதி, பெரியார், அய்யா வைகுண்டர், ராமலிங்க அடிகளார், ஸ்ரீநாராயண குரு போன்றோரின் நினைவுகள் மனதை நிறைக்கின்றன. அவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே நமதுநாடு மனிதர்கள் வாழத்தக்கதாக மாறி யிருக்கிறது.  அதன் பிறகு நாட்டில் எழுந்து  வந்த முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், சமுதாய அமைப்புகள் அந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய ஒரு மறுமலர்ச்சி நிகழ்வு நடப்பது பாராட்டுக்குரியது

‘சனாதன இந்துத்துவம்’

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மா செயல்படுத்திய வழி முறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும் வகுப்புவாதத்தையும்  போற்றுவதாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது.  சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவ மாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும் அதன் மறுநிர்மாணம் எனவும், அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வுக் கான வழி எனவும்  விவாதங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடை யாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலை யில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத்தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப் படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் பசுவுக்கும் பிராமண னுக்கும் நலம் உண்டாகட்டும் என்பதாகும். பசுவும் பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்ப தாகும்.  இது பசுவை  மையமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்கு  பொருந்துகிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அன்று இருந்த சமூக (அ) நீதிகள் அனைத்தும் மறைந்துவிட்டதாக கருத முடியுமா? அவை பல்வேறு வகையில் இன்றும் நீடிக்கின்றன. அன்று இருந்த அரசியல் அதிகாரத்தின் மேலாதிக்கம்  இன்றும் உள்ளது. அதனால்தான் வட இந்தியாவில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் அச்சுறுத்தப்படுகிறார்கள். சட்டத்தின் முன்னா லும் கூட தப்பித்துச் செல்ல இந்த மேலாதிக்கம் அவர்களுக்கு உதவுகிறது. 

தோள்சீலை...  ஓர் அரசியல் போராட்டம்

தோள்சீலை போராட்டம் வெறும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு பெரிய அரசியல்  உள்ளடக்கமும் கொண்டுள்ளது. சவரண,  ஜென்மி, நாடுவாழி, காலனிய நடைமுறை களுக்கு எதிரான போராட்டத்தின் சாயல் அதில் உள்ளது. மன்னராட்சிக்கும் அதற்கு தளம்  அமைத்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருந்தது அது. அந்த வகையில் தோள் சீலை போராட்டம் ஓர் அரசியல் போராட்டமாகவும் இருந்தது. வகுப்புவாதம், பெரும்பான்மை, சிறுபான்மை எதுவானாலும் மனிதகுலத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஆட்சி அதி காரத்துடன் வளர்ந்த பெரும்பான்மை வகுப்பு வாதம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையாள்வதுபோல் நாட்டை வகுப்புவாத அடிப்படையில்  சங்பரிவார் பிளவுபடுத்தவும் செய்கிறது.  மதச் சிறுபான்மையினரை அச்சத்தில் ஆழ்த்துவது அன்றாடம் நடந்து வரு கிறது. நமது நாட்டில் வகுப்புவாத மோதல்கள் இல்லாத சில மாநிலங்களே உள்ளன. அதில்  ஒன்று தமிழ்நாடு; மற்றொன்று கேரளமாகும்.  கேரளத்தில் தலித்துகளும் பிற்படுத்தப் பட்டோரும் கோயில்களில் அர்ச்சகராவது சாத்தியமாகி உள்ளது.

தகர்க்க முடியாத சக்தி அல்ல!

தாங்கள் தகர்க்க முடியாத சக்தி என்ற பாஜகவின் வாதம், தேசிய அரசியலில் தகர்வதை இன்று காண முடிகிறது. பாஜக வுக்கு எதிராக பீகாரில் நிதீஷ் கட்சி உள்ளது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜகவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக ஹரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் பேரணி  நடத்தின. 2024 இல் பாஜக-வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற முழக்கம் அதில் எழுந்தது.  சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாஜகவுடன் உள்ளது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 11 -ஆண்டுகளாக ஆட்சியில்  இருந்த தில்லி மாநகராட்சி பாஜக-வின் கையை  விட்டுப் போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்து வரும் சரியான அரசியலின் அறிகுறிகள்.  பாஜகவால் ஏற்படும் துன்பத்தை மக்கள் அறிந்து  கொள்கிறார்கள்.

அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங் பரிவார் பிரிவினை நிகழ்ச்சி நிரலை புகுத்துகிறது. காசியும், மதுராவும் அடுத்ததாக பிடித்து எடுக்க லாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால்  ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டு கொள்ளாமல் சங்பரிவார் உள்ளது. திரிபுராவில் பாஜக வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவிகிதம் ஓட்டு வாங்கி யவர்களுக்கு இப்போது 10 சதவிகிதம் ஓட்டு  குறைந்துள்ளது. திப்ராமோதா கட்சி ஓட்டுகளை  பிரிக்காமல் இருந்தால் அங்கு நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஒருமொழி, ஒருநாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்றப் பார்க்கிறார்கள். தி.மு.க. மொழிப் பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக  நடத்திய மொழிப்போராட்டம் நினைவு கூரத்தக்கது.  எல்.ஐ.சி.யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கி உள்ளார்.  அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற ஏஜென்சிகளை அரசிய லுக்காக பயன்படுத்துகிறார்கள். அம லாக்கத்துறை வழக்குகளில் வெறும் அரை சதவிகிதம் தண்டனை பெற்றுத் தந்துள்ளது. சி.பி.ஐ.யும் அப்படித்தான்.  மென்மையான இந்துத்துவா மூலம் இந்து வகுப்புவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது ஆபத்தை உண்டாக்கும்.   மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனு பவிக்கும் துன்பங்கள்  வரை அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமைப் போராட்டங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு

இங்கு தமிழ்நாடு முதல்வருக்கு ஓர் அழைப்பைக் கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டத்தின் 100ஆம்  ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். அதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வரவேண்டும் என அழைக்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். 

தலைவர்கள் பங்கேற்பு

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விழாவிற்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஏ.வி. பெல்லார்மின் தலைமை ஏற்றார்.  அய்யா  வைகுண்டர் தலைமைப் பதி மகா  சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார், கன்னியாகுமரி நாடாளுமன்ற  உறுப்பினர் விஜய் வசந்த், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். முன்னதாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  அறிமுகவுரை நிகழ்த்தினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் வரவேற்புரை யாற்றினார்.

தொகுப்பு : சி.முருகேசன்

 



 

;