புதுதில்லி, டிச.15- “மக்களைப் பிரிக்காத - அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துச் செல்லும் துணிச்சலான பிரதமரே இந்த நாட்டிற்குத் தேவை” என, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறி யுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா-வின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், பரூக் அப்துல்லாவும் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியிருப்பதா வது: “நான் முஸ்லிம்தான், அனைத்து மதங் களின் மீதும் என்னுடைய மதத்தைவிட மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதனால் என்ன தவறு வந்துவிடப் போகி றது? ஆனால், இன்றைய ஆட்சி நிர்வா கத்தைப் பாருங்கள். எவ்வாறு நாம் ஒவ் வொரு மூலையிலும் பிரிந்து கிடக்கிறோம்.
நமக்கு வலிமையான இந்தியா தேவை. இந்திய மக்கள் வலிமையாக மாறாதவரை, இந்தியா வலிமையாக மாறாது. அதற்கு, இந்துக்கள், முஸ்லிம் கள், சீக்கியர்கள் என அனைவரையும் இணைக்கும் - அவர்களை அரசியலால் பிளவுபடுத்தாத துணிச்சலான பிரதமர் தேவை. இந்தியாவிற்கு பிரிவினைவாதம் தேவையில்லை. ஆனால், சோகம் என்ன வென்றால், ஒவ்வொரு தேர்தலிலும் இந்தி யர்களும், இந்தியாவும் பிரிக்கப்பட்டு வரு கிறது. மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக் கும் அரசியல் முடிவுக்கு வரும் காலம் தூர மில்லை. இந்தக் கருமேகங்கள் கடந்து சென்றால், மலர்ச்சியான புத்துணர்ச்சி யான இந்தியாவைக் காணலாம். இந்தியா அனைவருக்குமானது, ஒருவருக்கானது அல்ல!’’. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள் ளார்.