states

தில்லியில் பிரதமர் மோடிக்கு ரூ. 360 கோடியில் பிரம்மாண்ட மாளிகை!

புதுதில்லி, அக். 6 -  குடியரசுத் தலைவர் மாளிகையைப் போல, பிரதம ருக்கும் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை எழுப்ப ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 360 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது. பிரதமருக்கான 360 கோடி மதிப்பிலான இந்த மாளிகை யை டெண்டர் வழங்கப்பட்ட நாளிலிருந்து 21 மாதங்க ளுக்குள் கட்டி முடிப்பதற்கு தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசின் பொதுப் பணித்துறை (CPWD) அக்டோபர் 1-ஆம் தேதி அழைப்பு விடுத்தது. ஆனால், அடுத்த இரண்டே நாட்களில் இந்த டெண்டரை அக்டோபர் 3-ஆம் தேதி மோடி அரசு திடீரென ரத்து செய்துள்ளது. பிரதமர் மாளிகைக்கான டெண்டர், இதேபோல ஜூலை 18-ஆம் தேதியும் ஒருமுறை வெளியிடப்பட்டது. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு ஜூலை 22-ஆம் தேதி எந்த விளக்கமும் இல்லாமல் ‘நிர்வாக காரணங்களை’ மேற்கோள்காட்டி, அந்த டெண்டர்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதன்மூலம் இரண்டாவது முறையாக பிரதமர் மாளிகைக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பிரதமரின் இந்த புதிய மாளிகை தாரா ஷிகோ சாலை யில் 21 ஆயிரம் சதுர மீட்டரில் இரண்டு தளங்களைக் கொண்டதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, ஒன்றிய அரசின் பொ துப்பணித் துறை அலுவலகம் போன்றவை அமைய உள்ளது. அத்துடன் இந்த மாளிகை நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், சிமெண்ட் கான்கிரீட் கட்ட மைப்பு கொண்ட  25 கண்காணிப்பு கோபுரங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

;