states

img

குஜராத் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுதில்லி, மே 6 - ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு அவசர கதியில் பதவி உயர்வு வழங்கியது குறித்து குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அளவிற்கு குஜராத் சட்டத்துறைச் செயலாளர் அவ்வளவு பெரிய நபரா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நீதிபதிகள், குஜராத் அரசு தெரிந்தே தவறு செய்துள்ளது என்றும் சாடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலை யொட்டி, அவ்வாண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது?” என கிண்ட லாக கேள்வி எழுப்பினார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கை விசாரித்த சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கினார். ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார். இதனால் ராகுலின் எம்.பி. பதவி பறிபோனது மட்டுமன்றி, அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டி போடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராகுலின் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமிக்கச் செய்யும் வகையில் திட்டமிட்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மாவுக்குத்தான்,  குஜராத் பாஜக அரசானது, ராஜ்கோட் மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமித்து பதவி உயர்வு வழங்கியுள்ளது. இவருடன் மேலும் 67 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பதவி உயர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, குஜராத் அரசின் சட்டத் துறையில் கீழ்நிலை செயலராகப் பணியாற்றும் ரவிகுமார் மேத்தா, சச்சின் பிர தாப்ராய் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அவர்கள், “குஜராத் மாவட்ட நீதிபதிகள் நியமனமானது, 65 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமல்லா மல், தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையிலும், தேர்வில் பெற்ற  மதிப்பெண் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு முறையில் மாவட்ட நீதிபதி பதவிகள் வழங்கப்பட உள்ளன. தாங்கள் முறையே  200க்கு முறையே 135.5 மற்றும் 148.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தங்களுக்கும் குறை வான மதிப்பெண் பெற்றவர்கள் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப் பட்டு உள்ளனர். இது சட்டவிரோதமா னது” என்று மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.

இவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் அஹ்சானுதீன் அமா னுல்லா அமர்வில் கடந்த ஏப்ரல் 13 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நீதித்துறை அலு வலர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்குமாறு குஜராத் அரசு  மற்றும் குஜராத் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் ஆகியோருக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த நோட்டீஸையும் மீறி, குஜராத் பாஜக அரசானது, ஏப்ரல் 18 அன்று எச்.எச். வர்மா உள்ளிட்ட 68 பேருக்கும் பதவி உயர்வு வழங்கி அறி விப்பாணை வெளியிட்டது. ஏப்ரல் 28 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தை மதிக்காமல், குஜராத் பாஜக அரசு மேற்கொண்ட நீதித்துறை நியமனம் குறித்து, ரவிகுமார் மேத்தா, சச்சின் பிரதாப்ராய் மேத்தா ஆகியோர் எடுத்துரைத்தனர். “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஏப்ரல் 18 அன்று 68 நீதிமன்ற அலுவலர்களுக்கு குஜராத் அரசு நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்துள்ளது. இந்தப் பதவி உயர்வு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. 

அப்படியானால், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகே, குஜராத் அரசு இந்தப் பதவி உயர்வை வழங்கியுள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள், “2022-இல்தான் இதற்கான தேர்வு நடைபெற்றுள்ளதால், பதவி உயர்வில் அதீதமான அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன? இருந்தும் பதவி உயர்வு குறித்த அறி விப்பை குஜராத் அரசு இவ்வளவு அவசரம் அவசரமாக அறிவிக்கிறது என்றால், இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் நடவடிக்கையன்றி வேறில்லை என்று நாங்கள் கருதுகிறோம்.   நீதிமன்ற நடைமுறைகளை மீறும் அளவிற்கு குஜராத் சட்டத்துறைச் செயலாளர் அவ்வளவு மிகப்பெரிய நபரா? என்று கேட்கிறோம். எனவே, இதுதொடர்பாக, குஜராத் மாநில அரசு செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று  உத்தரவிட்டனர். மேலும், “பதவி உயர்வுக்கு தேர்வா னவர்களின்- திறமையின் அடிப்படை யிலான பட்டியலை  தாக்கல் செய்ய  வேண்டும்” என்று குஜராத் உயர்நீதி மன்றப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட அவர்கள், “இந்த வழக்கு மே 8 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்றும் அறிவித்துள்ளனர்.