states

பணியின்போது மாற்றுத்திறனாளியாகும் தொழிலாளிக்கு மாற்று பணி வழங்குவது கடமை உச்சநீதிமன்றம் உத்தரவு

பணியின்போது மாற்றுத்திறனாளியாகும் தொழிலாளிக்கு மாற்று பணி வழங்குவது கடமை

உச்சநீதிமன்றம் உத்தரவு

பணியின்போது மாற்றுத்திறனாளி யாகும் தொழிலாளிக்கு மாற்று பணி  வழங்குவது முதலாளியின் கடமை  என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் அரசு போக்கு வரத்துக் கழகத்தில் பணியின் போது நிறக்குருடு மாற்றுத்திறன் ஏற்பட்டதால் மாற்றுப் பணி வழங்காமல், அப்பணி யிலிருந்து ஓய்வுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டார் ஓட்டுநர் ஜோசப். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதி பதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அரவிந்த் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.  ஆந்திர அரசு மற்றும் ஓட்டுநர்  ஜோசப் என இருதரப்பு வாதத்திற்கு  பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஓட்டு நர் ஜோசப்பை பணிநீக்கம் செய்த ஆந்திரப்பிரதேச போக்குவரத்துக் கழ கத்தின் உத்தரவை ரத்து செய்கி றோம். பணியின் போது மாற்றுத்திறனாளி யாகும் தொழிலாளியை கைவிடக்  கூடாது. ஓய்வுக்கு முன் பணிநீக்கம்  செய்யக்கூடாது. நியாயமான மாற்றுப் பணியை வழங்க வேண்டும். பணியின் போது மாற்றுத்திறனாளியாகும் தொழி லாளிக்கு மாற்று பணி வழங்குவது நிர்வா கத்தின் கருணைக்குரியதல்ல. மாறாக  அரசமைப்புசாசன விதிகளில் பொதிந்தி ருக்கும் பாகுபாடின்மை, கண்ணியம், சமமாக நடத்துதல் ஆகிய அடிப்படைக் கொள்கைகள் சார்ந்ததாகும். தொழி லாளிகளின் கண்ணியம் தொடங்கும் போது முதலாளிகளின் விருப்புரிமை முடி வுக்கு வருகிறது. இத்தகைய விவகாரங்க ளில் நீதிமன்றங்கள் தலையிட முடியும்” என தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, அரவிந்த் குமார் அமர்வு பொதுவான எச்சரிக்கையை விடுத்தது.