states

img

பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசு தோல்வி சோனியா காந்தி குற்றச்சாட்டு

பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசு தோல்வி சோனியா காந்தி குற்றச்சாட்டு

பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந் துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி.,குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக “தி இந்து (ஆங்கிலம்)” நாளிதழில் அவர் எழு தியுள்ள கட்டுரை யில், “2023 அக்டோ பர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது தான். ஆனால் இன்று வரை இஸ்ரேல் மேற்கொண்டு வருவது  இனப்படுகொலை ஆகும். 17,000 குழந் தைகள் உட்பட 55,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் பள்ளிகள், மருத்துவ மனைகள் தொழில்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.  நிலைமை இவ்வாறு உள்ள சூழ்நிலை யில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் விவ காரத்தில் மோடி அரசு மனிதநேயம், ஒழுக்கம் இரண்டையும் கைவிட்டு விட்டது. இந்தியாவின் நிலைப்பாடு அர சியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை.  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான பிரத மர் மோடியின் தனிப்பட்ட உறவுகளால் அதிகம் வடிவமைக்கப்பட்டதாக இருக்கி றது. இந்த தனிப்பயனாக்கப்பட்ட ராஜ தந்திர உறவுகள் ஏற்றுக்கொள்ள முடி யாதது. அதே போல இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கையை வழிநடத்த முடியாது.  பாலஸ்தீன பிரச்சனை மட்டு மின்றி அமெரிக்கா உட்பட பிற இடங்க ளிலும் இதேபோன்ற அணுகுமுறைகள் அவமானகரமான வழிகளில் முடிவடைந் துள்ளன. தென்ஆப்பிரிக்கா, அல்ஜீ ரியா மற்றும் வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்த இந்தியா வின் வரலாற்றை முதலில் மோடி அரசு  நினைவு கூர வேண்டும்.  1988ஆம் ஆண்டு பாலஸ் தீனப் பிரச்சனையில் இந்திய அர சாங்கம் தலைமை தாங்கி, அதன் அந்தஸ்தை முறையாக அங்கீகரித்தது. ஆனால் தற்போது நிலைமை வேறு வித மாக உள்ளது” என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.