புதுதில்லி, ஆக. 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, மக்களவையில் பாஜக உறுப்பி னர் நிஷிகாந்த் துபே அவதூறாகப் பேசிய தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களவையில் பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிராகவும் கூறிய கருத்துக்களுக்காகவும், அவர்களைத் “தேசத் துரோகக் கட்சி” என்று அழைக்கப்படும் கட்சியில் இருக்கிறார்கள் என்றும் கூறியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. துபே, தன் நிலையை மெய்ப்பித்திட “ஆயிரக்கணக்கான மெயில்களை” (“thousands of mails”) அளித்திட முடியும் என்று, நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி, குறிப்பிட்டிருக்கிறார். அவர், அவ்வாறே செய்யட்டும். அப்போதுதான் அவருடைய கூற்றுகளின் முழுப் பொய்யும் அம்பல மாகும். இந்த விஷயம் தொடர்பாக ஊடகங்களில் ஒருசிலர் மேற்கொண்டுள்ள தவறான பிரச்சாரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும், சித்தாந்தமும் ஒரு திறந்த புத்தகமாகும். இந்துத்துவா மதவெறி சித்தா ந்தத்திற்கு எதிராக மிகவும் உறுதியுடனும் ஒருமித்தும் இடதுசாரிகள் எதிர்த்து வரு கிறார்கள் என்பது பாஜகவிற்கு நன்கு தெரி யும். அதனால்தான் அது இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது.