states

img

ராஜஸ்தானில் அதிர்ச்சி 9 வயது சிறுமி  மாரடைப்பால் பலி

ராஜஸ்தானில் அதிர்ச்சி 9 வயது சிறுமி  மாரடைப்பால் பலி

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இளம் வயது மாரடைப்பு மிக அதிகளவில் நிகழ்ந்து வருகி றது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பு ஊசி தான் என்று கூறப்பட்டாலும், உறுதியான ஆய்வு முடிவுகள் இது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், ராஜஸ்தானில் 9 வயது சிறுமி மாரடைப்பால் உயிரி ழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போலவே செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றார். காலை முதல் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  2 முறை மாரடைப்பு சிறுமியை பரிசோதித்த மருத்து வர் சுபாஷ் வர்மா கூறுகையில், “பரிசோதனையின் போது சிறுமிக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம். ஒரு நோயாளியை அழைத்து வருவ தில் தாமதம் ஏற்பட்டால், மக்கள் உடனடி யாக உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில் இது பிறவி இதய நோயா கக்கூட இருக்கலாம். பெற்றோர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். எனி னும் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.