states

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திடுக!

புதுதில்லி, ஜன.16- இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் பற்றி, அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  ஆலோசனை நடத்தினார். சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளா தாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வரு கிறது. இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி  ரூபாய் கடன் உதவியைக் கோர திட்ட மிட்டுள்ளது.  இந்நிலையில் ‘காணொலி வழியாக  இலங்கை நிதியமைச்சர் பசில்  ராஜபக்சே, இந்திய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசினார். அப்போது இலங்கையின் பொரு ளாதாரத்தை வலுப்படுத்த அங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும், முதலீடு செய்வது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர்.  இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகை யில், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும். மேலும், சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அமைச்சரிடம் வலி யுறுத்தினேன் என்று தெரிவித்தார்.  இவர்களின் சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள  இலங்கை மத்திய  வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு இலங்கையின் வெளியுறவுத்துறையை பெரிதும் ஸ்திரப்படுத்த உதவும்.” எனத் தெரி வித்துள்ளார்.