states

பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை குறைப்பு

புதுதில்லி,ஏப்.9- கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டன. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படு கிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட்டுக்கொள்ள முடியும் என கூறப்படு கிறது.  இந்த நிலையில், இரு தடுப்பூசி டோஸ்களின் விலையும் பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டு ரூ.225 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது.  இதனை சீரம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவல்லா மற்றும் பாரத்  பயோடெக்கின் துணை நிறுவனர் சுசித்ரா எல்லா தங்களது டிவிட்டரில் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளனர்.