states

img

புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ படத்திற்கு பாஜகவால் சிக்கல்?

பெங்களூரு, மார்ச் 24 - மறைந்த கன்னட நடிகர்  புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தை, தியேட்டர்களி லிருந்து வெளியேற்றும் முயற்சி களில் பாஜகவினர் ஈடுபட்டுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். இந்த படம் சமீபத்தில் வெளியானது. புனித்தின் கடைசி படம் என்பதால் செண்டிமெண்ட் டாக அவரது ரசிகர்கள் இந்த படத்திற்கு ஏகோபித்த ஆத ரவை அளித்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக சென்று படத்தைப் பார்த்து வருகின்ற னர். இதனால் கர்நாடகத்தில் பல தியேட்டர்களில் இந்த படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தை அகற்றிவிட்டு, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இந்திப் படத்தை திரை யிடும்படி, தியேட்டர்களுக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘ஜேம்ஸ் படத்தின் தயா ரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா என்னை சந்தித்தார். அப்போது  பாஜக எம்எல்ஏ ஒருவரும், அந்த கட்சியினரும் ‘ஜேம்ஸ்’ படத்தைத் திரையிடுவதை நிறுத்தும்படி தனக்கு அழுத்தம் கொடுப்பதாக புகார் கூறினார்’ என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பகி ரங்கமாகவே இந்த விஷயத்தை போட்டுடைத்தார். ஆனால், இந்த குற்றச் சாட்டை பாஜக மறுத்துள்ளது.