states

img

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.295 கோடி செலவு

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.295 கோடி செலவு

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கிய மான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்கள் தான். நாடாளு மன்றம் கூடினால் அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் வெளிநாடு பறந்து விடுவார். இப்போதும் கூட, ஆபரேசன் சிந்தூர் விவகாரம், பீகார் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்த விவகாரம், ஏர் இந்தியா விமான விபத்து போன்றவற்றை நாடாளுமன்றத் தில் விவாதிக்கவும், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்காமல் தப்பிப்ப தற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடித்து  இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செல வினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநி லங்களவையில் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ஒன்றிய வெளி யுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2025ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை, சவூதி அரேபியா ஆகிய 5 நாடுகளுக்கான பயணங்களுக்கான செலவினங்களின் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் வழங்கியது. 2025ஆம் ஆண்டிற்கான வெளியிடப் பட்ட விவரங்களில், பிரான்ஸ் பயணத் திற்காக ரூ.25.5 கோடி, அமெரிக்கா பயணத்துக்கு ரூ.16.5 கோடி, தாய்லாந்து ரூ.4.9 கோடி, இலங்கைக்கு ரூ.4.4 கோடி, சவூதி அரேபியாவிற்கு ரூ.15.5 கோடி செலவிடப்பட்டது. அதாவது, 2025ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் 5 நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறது. விளம்பரத்திற்கு கூட... அதே போல 2024ஆம் ஆண்டில் ரூ.100  கோடிக்கும் அதிகமாகவும், 2023இல் ரூ.93  கோடியும், 2022இல் ரூ.55 கோடியும், 2021இல் ரூ.36 கோடியும் பிரதமர் மோடி யின் வெளிநாட்டு பயணத்திற்கு செல விடப்பட்டுள்ளது.  இதுவரை செலவிடப்பட்டதில் அதிகப் பயண செலவு அமெரிக்கா பயண மாகும். 2021 முதல் 4 முறை அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக ரூ.74.44 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று முறை பிரான்ஸ் பயணத்துக்கு ரூ.41.29 கோடி, மூன்று முறை ஜப்பான் பயணத்துக்கு ரூ.32.96 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் பிரதமரின் பொது நிகழ்வு களை விளம்பரப்படுத்துவதற்கும் ஒளிபரப்புவதற்கும் ரூ.1.03 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருக்கிறது. ‘விளம்பரம்’ என்ற செலவு இந்தியா, எகிப்தை தவிர வேறு எந்த நாடும் செய்வதில்லை. எகிப்தின் அதிகபட்ச விளம்பரச் செலவு ரூ.11.90 லட்சம் மட்டுமே. ஆனால் இந்தியா ரூ.1.03 கோடி  செலவிட்டிருக்கிறது.  இன்னும் பாக்கி... அதே நேரத்தில் இந்த ஆண்டு மேற் கொள்ளப்பட்ட மீதமுள்ள 9 நாடு களுக்கான பயணங்களுக்கான பில்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறது. ஆக மொத்தம் 2021-2024க்கு இடையில் வெளிநாட்டு பய ணங்களுக்காக மட்டும் பிரதமர் மோடி ரூ.295 கோடிக்கும் அதிகமாகச் செல விட்டிருக்கிறார்.